பறவைகளுக்கு தண்ணீர் வையுங்கள் பறவைகளின் தாகம் தீர்ப்போம்...
பறவைகளுக்கு தண்ணீர் வையுங்கள் பறவைகளின் தாகம் தீர்ப்போம்...
மார்ச்.06., 2023
இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளை சார்பில் பறவைகளுக்கு தண்ணீர் வைக்க பொதுமக்களுக்கு வேண்டுகோள். இதுபற்றி இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளை சார்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது; தண்ணிருக்காக தவிக்கும் பறவைகளுக்கு பொதுமக்கள் ஒரு சிறிய கிண்ணத்தில் தண்ணீர் வையுங்கள்.
வெயில் சுட்டெரிக்கிறது. தாகத்துக்கு தண்ணீர் கிடைக்காவிட்டால் படபடப்பாய் வருகிறது. நமக்கே இந்த நிலை என்றால், வாயில்லா ஜீவன்களான பறவைகள் என்ன பாடுபடும்.
இனி கோடை காலம் என்பதால் நம்மில் பலர் பகலில் வீட்டைவிட்டுக்கூட வெளியே வர மாட்டோம். அந்த அளவுக்குக் கோடையின் தாக்கம் இருக்கும். காலநிலை மாற்றத்தால் தற்போது வருடா வருடம் அந்தக் கோடையின் வீரியம் அதிகரித்துக்கொண்டே போவதும் விளைவுகளை மோசமாக்குகிறது. அவ்வளவு ஏன், அதிகப்படியான வெப்பத்தாலும் தண்ணீர் தாகத்தாலும் சில நேரங்களில் உயிரிழப்புகள்கூட நடக்கிறது. வெயிலின் தாக்கம் கடந்த நான்கு வருடங்களில் இல்லாத அளவுக்கு இந்தமுறை அதிகமாக உள்ளது. மனிதர்களால்கூடத் தாங்க முடியாத வெப்பம் சின்னஞ்சிறு பறவைகளை மட்டும் எப்படி விட்டுவைக்கும்? ஆம், விட்டுவைப்பதில்லை. இந்த வெயிலின் தாக்கம் பறவைகள், வனவிலங்குகளின் உயிரிழப்புகளுக்கும் காரணமாகிறது.
உணவில்லாமல்கூட வாழலாம். ஆனால், ஒரு சொட்டுத் தண்ணீர் இல்லாமல் வாழ முடியாது என்பது நாம் அனைவரும் அறிந்த யதார்த்தமான உண்மை. அது மனிதர்களுக்கு மட்டுமன்றி மற்ற உயிர்களுக்கும் பொருந்தும். அவற்றைக் காப்பாற்றுவதற்கான சிறிய முயற்சிகள்தான் பறவைகளுக்குத் தண்ணீர் வைப்பது. இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளை சார்பில் உறுப்பினர்கள் அனைவரும் பறவைகளுக்கு தண்ணீர் வைத்து வருகிறார்கள். அதேபோல பொதுமக்கள் அனைவரும் உங்கள் வீடுகளில் சிறிய பாத்திரத்தில் தண்ணீர் வைக்க இயற்கையை நேசி அறக்கட்டளை சார்பில் இருகரம் கூப்பி கேட்டுக்கொள்கிறோம். பறவைகளின் தாகம் தீர்ப்போம்.
காடு வளர்ப்போம் காட்டுயிர்களை பாதுகாப்போம்
No comments
நன்றி | Thank You