Breaking News

ரூ.265.44 கோடி மதிப்பில் உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பால நீட்டிப்பு பணி: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார் #SP_Velumani

கோவை: உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பால நீட்டிப்பு பணியை ரூ.265.44 கோடி மதிப்பில் எஸ்.பி.வேலுமணி இன்று துவக்கி வைத்தார். நகரின் முக்கிய சாலைகளுள் ஒன்றாக உள்ளது உக்கடம்-ஆத்துப்பாலம் சாலை. இந்த சாலையில் உக்கடம் முதல் கரும்புக்கடை வரையில் மேம்பாலம் அமைக்க ரூ.216 கோடி ஒதுக்கப்பட்டு 75 சதவீத பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.



இந்த நிலையில், இந்த மேம்பாலத்தை ஆத்துப்பாலம் வரை நீட்டிக்க கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி, இரண்டாம் கட்ட பாலம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பாலத்தை மொத்தமாக ரூ.265.44 கோடி மதிப்பில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, உக்கடம் சந்திப்புஒப்பணக்கார வீதி-ஆத்துப்பாலம் மேம்பால நீட்டிப்பு பணியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று துவக்கி வைத்தார்.


இதனை தொடர்ந்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  பேசியதாவது:  இந்த சாலையில் அமையும் மேம்பாலம் மூலம் மதுரை, உடுமலை, பொள்ளாச்சி, கொச்சி செல்வோர் பயன்பெறுவார்கள். மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த அரசு கோவையில் பல்வேறு பாலங்களை அமைத்துள்ளது. பெரிய குளத்தின் மீது செல்லும் பாலம் தடைகளை தாண்டி அமைத்தோம். நிறைய மக்கள் நடைபயிற்சி செய்து வருகின்றனர்.


முந்தய ஆட்சியாளர்களால் கரும்புக்கடை ஒதுக்கப்பட்டது. நான் ஒவ்வொரு இடமாக பார்த்து அடிப்படை வசதிகள் செய்து கொடுத்துள்ளேன். இரண்டு நாட்களுக்கு முன்பு கர்ப்ஸ்தான் இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே இவ்வளவு பெரிய கட்டிடம் இல்லை. 120 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்க உள்ளோம். இதில் இஸ்லாமிய, கிறிஸ்தவ மத ஜோடிகளும் உள்ளனர். என் வீட்டு திருமணம் போல் நடத்துகிறேன்.


50 ஆண்டுகள் இல்லாத வளர்ச்சி 5 ஆண்டுகளில் கொடுத்துள்ளோம். எங்களை பொறுத்தவரை கூட்டணி வேறு கொள்கை வேறு. என்றும் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம். நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற யாரும் இங்கு வரவில்லை. நாங்கள் தான் உங்களுடன் உள்ளோம்.


இந்த நிகழ்ச்சியில், துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், மாவட்ட ஆட்சியர் ராசாமணி, எம்.எல்.ஏ,.க்கள் அம்மன் அர்ஜூனன், எட்டிமடை சண்முகம், ஆறுக்குட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments

நன்றி | Thank You