பொள்ளாச்சி தங்கும்விடுகளில் மோசடி கும்பல்களை கண்காணிப்பு: கண்காணிக்க போலீஸாரின் தனிக்குழு
பொள்ளாச்சி, ஜன.30
பொள்ளாச்சியில் உள்ள தங்கும்விடுகளில் மோசடி கும்பல்களை கண்காணிக்க போலீஸார் சார்பில் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. < /span>
வெள்ளிக்கிழமை பொள்ளாச்சி-குமரன்நகரைச்சேர்ந்த ரியாஸ் என்பவரிடம் கேரளாவை சேர்ந்த 19பேர், தமிழகத்தை சேர்ந்த மூன்றுபேர் அதிர்ஷ கற்கள் இருப்பதாகவும், செல்லாத ரூபாய் நோட்டுக்களை மாற்றித்தருவதாகவும் கூறி மோசடியில் ஈடுபட முயன்றனர்.
இந்த மோசடி கும்பலை சேர்ந்த 22 பேரை பொள்ளாச்சி மேற்கு போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். இதேபோன்று, இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆனைமலை காவல் எல்லையில் இரிடியம் மோசடி கும்பலைச்சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இப்படி பொள்ளாச்சியை மையமாக வைத்து வெளியூரை சேர்ந்த நபர்கள் மோசடியில் ஈடுபட்டுவருவதால் பொள்ளாச்சியில் உள்ள தங்கும் விடுதிகளில் தங்குபவர்களை கண்காணிக்க பொள்ளாச்சி உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார் ஆலோசனைப்படி தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில் உள்ளவர்கள் சீருடை இல்லாமல் கண்காணிக்கவுள்ளனர். அதேபோல், சீருடையில் உள்ள காவலர்களும் தனியாக கண்காணிப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
No comments
நன்றி | Thank You