காகங்களிடமிருந்து ஆந்தையை மீட்ட பள்ளி மாணவன்: வனத்துறை பாராட்டு
பொள்ளாச்சி. ஜன. 30.,
பொள்ளாச்சி அருகே காகங்களிடமிருந்து ஆந்தையை மீட்ட மாணவருக்கு வனத்துறையினர் பாராட்டு தெரிவித்தனர்.
பொள்ளாச்சி அடுத்த அங்கலக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ஹரிஹர பிரியன். அதே பகுதியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். சனிக்கிழமை அன்று அங்கலக்குறிச்சி முத்தமிழ் நகர் பகுதியில் ஆந்தை ஒன்றை காகங்கள் தாக்கிக் கொண்டு இருந்ததை பார்த்துள்ளார்.
இதையடுத்து காகங்களை விரட்டி விட்டுவிட்டு ஆந்தையை மீட்டு தண்ணீர் கொடுத்து அதற்கு முதலுதவி அளித்துள்ளார். பிறகு ஆந்தையை தனது தந்தை இயற்கை ஆர்வலரான மரம் மாசிலாமணி உதவியுடன் ஆழியாறு வனத்துறை சோதனை சாவடியில் ஒப்படைத்தார்.
ஆந்தையை ஒப்படைத்த பள்ளி மாணவனை வனவர் இளவரசி உள்ளிட்ட வனத்துறையினர் பாராட்டினர். அந்த ஆந்தை அடர் வனப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்டது.
No comments
நன்றி | Thank You