தென்னை சாகுபடி தொழில்நுட்ப முதுநிலை பட்டய படிப்பு துவக்கம்
பொள்ளாச்சி, டிச.3
ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் தென்னை சார்ந்த முதுநிலை பட்டய படிப்பு வியாழக்கிழமை துவக்கப்பட்டது.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் திறந்தவெளி மற்றும் தொலைதூர கல்வி இயக்ககம் மற்றும் ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையம் இணைந்து நடத்துகின்ற தென்னை சாகுபடி தொழில்நுட்பம் என்ற முதுநிலை பட்டய படிப்பு துவக்கவிழா வியாழக்கிழமை ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக திறந்தவெளி மற்றும் தொலைதூர கல்வி இயக்ககம் இணைப்பு பேராசிரியர் மற்றும் பட்டய படிப்பு ஒருங்கிணைப்பாளர் ராஜமாணிக்கம் வரவேற்றார். தொலை தூர கல்வி இயக்குனர் ஆனந்தன், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழக ஆட்சிமன்ற குழு உறுப்பினர் கிருஷ்ணசாமிக்கவுண்டர், பயிர் பாதுகாப்பு இயக்குனர் பிரபாகர், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக நெல்ஆராய்ச்சி நிலையம் பேராசிரியர் மற்றும் தலைவர் கணேசமூர்த்தி, தோட்டக்கலை கல்லூரி முதல்வர் புகழேந்தி, தென்னை ஆராய்ச்சி நிலைய தலைவர் பிரனிதா நன்றிகூறினார்.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக திறந்தவெளி மற்றும் தொலைதூர கல்வி இயக்ககம் இணைப்பு பேராசிரியர் மற்றும் பட்டய படிப்பு ஒருங்கிணைப்பாளர் ராஜமாணிக்கம் கூறுகையில், ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையம் தவிர கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், வேளாண்மை மண்டல ஆராய்ச்சி மையம் பையூர், வேளாண்மை அறிவியல் மையம் திருப்பதிசாரம், தென்னை ஆராய்ச்சி மையம் வைகை டேம், தென்னைஆராய்ச்சி நிலையம் வேப்பங்குளம் ஆகிய ஆறு மையங்களில் முதுநிலை பட்டய படிப்பு வழங்கப்படும்.
தென்னை சாகுபடி தொழில்நுட்பம், தாய்மரம் தேர்ந்தெடுத்தல், கலப்பின ரகங்கள், நடவுசெய்தல், உரமேலாண்மை. பூச்சிமேலாண்மை, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல் போன்றவை முதுநிலைய பட்டயபடிப்பில் பாடங்களாக சேர்க்கப்பட்டுள்ளது. ஏதாவது ஒரு பட்டம் படித்தவர்கள் தகுதியுடையவர்கள். ஒரு ஆண்டு கால படிப்பு. 6 பாடத்திட்டங்கள் உள்ளன.
மேலும் தொடர்புக்கு 94420-05805 என்ற தொடர்புகொள்ளலாம் என்றார்.
---
No comments
நன்றி | Thank You